மரநடுகை மாதத்தினை முன்னிட்டு, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் "கார்த்திகைப் பூக்கள்" எனும் பெயரில் மர வளர்ப்புச் செயற்திட்டம் இன்று( 2024.11.01) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் யாழ்ப்பாணம் சன்மார்க்க மகா வித்தியாலயத்தில் முதற் கட்டமாக மரநடுகை நிகழ்வானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், கலைப்பீடத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் திரு. சு. கபிலன் , கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் , கலைப்பீட மாணவர்கள், சன்மார்க்க மகாவித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் இவ் மர நடுகை வைபவத்தில் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வானது கார்த்திகையின் மகத்துவத்தை எமது அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் நோக்குடன் செயற்படுத்தப்படுகின்றது .

No comments:
Post a Comment